தங்கத்தை இப்ப வாங்கலாமா? தட தட சரிவில் தங்கம் விலை!

 தங்கம் கிட்டத்தட்ட எல்லோருக்குமான சொத்து. இதில் ஏழை பணக்காரன் என்கிற பாகுபாடு கிடையாது. ஒரு நபரின் அந்தஸ்தை காட்டுவது, ஒருவர் முதலீடு செய்வது, ஒருவர் தன் சொந்த பந்தங்களுக்கு திருமணத்தின் போது நகை போடுவது என எந்த பக்கம் திரும்பினாலும், தங்கத்தைச் சார்ந்து சில விஷயங்கள் நடந்து கொண்டு தான் இருக்கின்றன. அவ்வளவு ஏன்... ஒரு அவசர தேவைக்கு கடன் வாங்க வேண்டும் என்றால் கூட தங்கத்தை வைத்து வாங்கிக் கொள்ள்லாம். அப்படிப்பட்ட தங்கம் விலை மீண்டும் சரிவைக் காணத் தொடங்கி இருக்கிறது.   


 வாங்க பாக்கலாம் சென்னையில் ஆபரணத் தங்கம் விலை நிலவரம் என்ன? மல்டி கமாடிட்டி எக்ஸ்சேஞ்சில் தங்கம் விலை என்ன? ஒரு அவுன்ஸ் சர்வதேச தங்கம் விலை நிலவரம் என்ன? என எல்லாவற்றையும் இந்த கட்டுரையில் பார்ப்போம்.


 அதோடு இப்போது தங்கம் வாங்கலாமா என்பதையும் பார்ப்போம். தங்கம் விலை நிலவரம் (24 கேரட் & 22 கேரட்) சென்னையில், இன்று 24 கேரட் 10 கிராம் ஆபரணத் தங்கம் விலை 52,410 ரூபாய்க்கு விற்பனை ஆகிக் கொண்டு இருக்கிறது. அதே போல 22 கேரட் 10 கிராம் ஆபரணத் தங்கம் விலை 48,050 ரூபாய்க்கு விற்பனை ஆகிக் கொண்டு இருக்கிறது. கடந்த சில நாட்களாக ஏற்றம் கண்டு வந்த தங்கம் விலை, தற்போது மீண்டும் சரியத் தொடங்கி இருக்கிறது. MCX gold rate - டிசம்பர் 2020 இந்தியாவின் மல்டி கமாடிட்டி எக்ஸ்சேஞ்சான, எம் சி எக்ஸ் சந்தையில், டிசம்பர் மாதத்துக்கான 10 கிராம் தங்க ஃப்யூச்சர் காண்டிராக்டின் விலை, நேற்றைய குளோசிங் விலையான 50,526 ரூபாயில் இருந்து, 515 ரூபாய் (1.01 %) விலை சரிந்து 50,011 ரூபாய்க்கு வர்த்தகமாகிக் கொண்டு இருக்கிறது.  


 தட தட விலை சரிவு கடந்த 07 ஆகஸ்ட் 2020 அன்று, இதே டிசம்பர் மாதத்துக்கான 10 கிராம் தங்க ஃப்யூச்சர் காண்டிராக்டின் விலை, அதிகபட்சமாக 56,379 ரூபாயைத் தொட்டு வர்த்தகமானது. இன்று (07 அக்டோபர் 2020) 50,011 ரூபாயைத் தொட்டு வர்த்தகமாகிக் கொண்டு இருக்கிறது. 6,368 ரூபாய் சரிவில் எம் சி எக்ஸ் தங்கம் விலை ஆக, எம் சி எக்ஸ் தங்கம் விலை 6,368 ரூபாய் விலை சரிந்து வர்த்தகமாகிக் கொண்டு இருக்கிறது. எம் சி எக்ஸ் தங்கம் அவ்வப் போது ஏற்றம் கண்டாலும், இறக்க டிரெண்டில் இருந்து இது வரை முழுமையாக வெளி வந்ததாகத் தெரியவில்லை. தட தடவென சரிந்து கொண்டே போகிறது. தங்கம் விலை XAU USD CUR ஒரு அவுன்ஸ் சர்வதேச தங்கம் விலை, நேற்று (05 அக்டோபர் 2020) 1,878 டாலருக்கு வர்த்தகம் நிறைவடைந்தது. இன்று (07 அக்டோபர் 2020) இந்த குளோசிங் விலையில் இருந்து 12 டாலர் (0.66 %) விலை அதிகரித்து, 1,890 டாலருக்கு வர்த்தகமாகிக் கொண்டு இருக்கிறது. 

 சர சர சரிவில் தங்கம் விலை கடந்த 25 செப் 2020 அன்று 1,861 டாலருக்கு வர்த்தகமான ஒரு அவுன்ஸ் சர்வதேச தங்கம் விலை, மெல்ல அதிகரித்து 5 அக்டோபர் 2020 அன்று 1,913 டாலரைத் தொட்டது. ஆனால் நேற்று திடு திப்பேன தங்கம் விலை சரிந்து, 1,878 டாலருக்கு வர்த்தகம் நிறைவடைந்து இருக்கிறது. செப்டம்பரில் 4.3 % விலை சரிவு ஒரு அவுன்ஸ் சர்வதேச தங்கம் விலை, கடந்த செப்டம்பர் 2020-ல் 4.3 சதவிகிதம் விலை சரிந்து இருக்கிறது. 24 கேரட் 10 கிராம் சென்னை ஆபரணத் தங்கம் விலை 2.7 % விலை சரிவையும், எம் சி எக்ஸ் டிசம்பர் காண்டிராக்டின் விலை 2.7 சதவிகிதமும் இறக்கம் கண்டு இருக்கின்றன. இந்த செப்டம்பரில் இந்திய ரூபாய்க்கு எதிரான அமெரிக்க டாலர் மதிப்பு 1.24 % பலமடைந்து இருக்கிறது. தங்கத்தில் முதலீடு சரிவு உலகின் மிகப் பெரிய தங்க ட்ரஸ்டான SPDR Gold Trust-ன் கையிருப்பு, நேற்று (06 அக்டோபர் 2020) 0.32 சதவிகிதம் சரிந்து இருக்கிறதாம். ஆக தங்கத்தில் முதலீடு குறைந்தால், விலை தானாகே கொஞ்சம் சரியத் தானே செய்யும்? அதான் சரிந்து இருக்கிறது. இந்தியாவில் தங்க டிமாண்ட் சரிவு கடந்த செப்டம்பர் 2020 மாதத்தில், இந்தியா இறக்குமதி செய்த தங்கத்தின் அளவு 59 சதவிகிதம் சரிந்து இருக்கிறது. ஆக ஆபரணத் தங்கத்துக்கான டிமாண்ட் இந்த செப்டம்பர் 2020-ல் கூட பழைய அளவுக்கு வரவில்லை என்பதை இதில் இருந்தே புரிந்து கொள்ள முடிகிறது. தடுமாறும் தங்கம் விலை ஸ்டாண்டர்ட் சார்ட்டர்ட் வங்கி, தன்னுடைய அறிக்கையில், தங்கம் விலை 1,900 டாலர் என்கிற ரெசிஸ்டென்ஸைத் தாண்டி வர்த்தகமாக வேண்டும் அப்போது தான் தங்கத்தின் விலை ஏற்றம் உறுதி செய்யப்படும் என்றது. கடந்த சில தினங்கள் 1,900 டாலருக்கு மேல் போன சர்வதேச தங்கம், விலை நேற்று, 1,878 டாலரில் வர்த்தகம் நிறைவடைந்து இருக்கிறது. எனவே தங்கம் விலை கொஞ்சம் விலை சரிய வாய்ப்பு இருக்கிறது. இப்போது தங்கம் வாங்கலாமா? உலகின் முன்னணி கமாடிட்டி முதலீட்டாளரான ஜிம் ராஜர்ஸ், தங்கத்தின் விலை, வருங்காலத்தில் நல்ல விலை ஏற்றம் காணும் எனச் சொல்லி இருக்கிறார். அதோடு, கடந்த 2019-ம் ஆண்டில் இருந்து தங்கத்தில் முதலீடு செய்து வருவதாகச் சொல்லி இருக்கிறார். தங்கத்தின் ஏற்ற டிரெண்டில் 10 - 15 சதவிகித விலை சரிவை எல்லாம் கண்டு கொள்ள வேண்டாம் எனச் சொன்னதும் இங்கு குறிப்பிடத்தக்கது. எனவே ஜிம் ராஜர்ஸ் சொல்வதை வைத்துப் பார்க்கும் போது இப்போது முதலீடு செய்ய விரும்புபவர்கள் முதலீடு செய்யலாம்



Comments

Popular posts from this blog

India’s health budget fourth lowest in world, accoring to Oxfam

Lee Kun-hee, who made S.Korea's Samsung a global powerhouse, dies at 78

BANK Q & A -9