தமிழகத்தில் ஐஏஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம்... டாஸ்மாக் மேலாண் இயக்குனராக மோகன் நியமனம்!
தமிழகத்தில் ஐஏஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம்... டாஸ்மாக் மேலாண் இயக்குனராக மோகன் நியமனம்!
சென்னை: தமிழகத்தில் 10 க்கும் மேற்பட்ட ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். டாஸ்மாக் மேலாண் இயக்குனராக ஐ.ஏ.எஸ் அதிகாரி மோகன் நியமிக்கப்பட்டுள்ளார். இதற்கான உத்தரவை தலைமை செயலாளர் பிறப்பித்துள்ளார். இது குறித்து வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில் தலைமை செயலாளர் கூறியிருப்பதாவது: டாஸ்மாக் மேலாண் இயக்குனராக ஐ.ஏ.எஸ் அதிகாரி மோகனும், பள்ளிக்கல்வித்துறை ஆணையராக வெங்கடேஷ்ஷும் நியமிக்கப்பட்டுள்ளனர்.
ஈரோடு மாவட்ட வணிக வரித்துறை இணை ஆணையராக காஞ்சிபுரம் மாவட்ட துணை கலெக்டர் சரவணன் பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். லடாக் விவகாரம்...
தமிழ்நாடு தொழில் முதலீட்டுகழகத்தின் மேலாண் இயக்குனராக பள்ளிக்கல்வித்துறை இணை ஆணையர் சிஜி தாமஸ் வைத்யன் நியமிக்கப்பட்டுள்ளார். பழநி தண்டாயுதபாணி கோவில் செயல் அலுவலராக வணிக வரித்துறை இணை ஆணையர் கிராந்தி குமார் நியமிக்கப்பட்டுள்ளார்
Comments
Post a Comment