முக்கிய அலார்ட்
1.5 கிலோமீட்டர் உயரம் வரை வளிமண்டல மேலடுக்கு.. மிக கனமழை கொட்ட போகுது.. முக்கிய அலார்ட்
சென்னை: 1.5 கிலோமீட்டர் உயரம் வரை வளிமண்டல மேலடுக்கு சுழற்சி மற்றும் வெப்பச்சலனம் காரணமாக அடுத்த 24 மணி நேரத்தில் தமிழகத்தில் பல மாவட்டங்களில் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை மையம் அறிவித்துள்ளது.
தமிழகத்தில் சேலம், நாமக்கல், கரூர், கள்ளக்குறிச்சி, கடலூர், பெரம்பலூர், திருச்சிராப்பள்ளி, தஞ்சையில் கனமழை பெய்யக்கூடும் என்று வானிலை மையம் அறிவித்துள்ளது.இதேபோல் 'புதுக்கோட்டை, மதுரை, சிவகங்கை, ராமநாதபுரத்தல் கனமழை பெய்யக்கூடும் என்றும் வானிலை மையம் இன்று வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியுள்ளது.
சென்னை வானிலை ஆய்வு மையம் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: 1.5 கிலோ மீட்டர் உயரம் வரை நிலவும் வளிமண்டல சுழற்சி மற்றும் வெப்பச்சலனம் காரணமாக அடுத்த 24 மணி நேரத்தில் தமிழகத்தில் பெரும்பாலான மாவட்டங்கள் புதுவை, காரைக்கால் உள்பட ஒரு சில இடங்களில் மாலை அல்லது இரவு நேரங்களில் இடியுடன் கூடிய லேசான முதல் மிதமான மழை பெய்யும்
Comments
Post a Comment