கொரோனா வைரஸ் காற்று வழியாக பரவக்கூடும்
கொரோனா வைரஸ் காற்று வழியாக பரவக்கூடும் என்பதை மிகவும் தாமதமாக ஒப்புக்கொண்ட அமெரிக்கா நோய் தடுப்பு மையங்கள்

உலகையே அச்சுறுத்திக் கொண்டிருக்கும் கொரோனா வைரஸ் பற்றி பலரும் பலவிதமாக பேசி வருகிறார்கள். இந்த வைரஸ் காற்றின் மூலம் பரவுமா? பரவாதா? என்பது குறித்து சர்ச்சை நிலவி வந்தது.
32 நாடுகளைச் சேர்ந்த 239 விஞ்ஞானிகள் மேற்கொண்ட ஒரு ஆய்வில் கொரோனா வைரஸ் காற்றில் மிதக்கும் தன்மை கொண்டது என்றும், காற்றின் மூலம் அது பரவும் என்றும் கூறப்பட்டது.
காற்றில் சிறிய துகள்கள் மூலம் கொரோனா வைரஸ் பரவும் என்பதற்கான ஆதாரத்துடன் 32 நாடுகளை சேர்ந்த 239 விஞ்ஞானிகள் உலக சுகாதார அமைப்புக்கு கடிதம் எழுதினர். மேலும் உலக சுகாதார அமைப்பின் பரிந்துரைகளைத் திருத்துமாறு கேட்டு கொண்டனர்.
பின்னர் உலக சுகாதார அமைப்பும் அதை ஒப்புகொண்டு வழிகாட்டுதல்களை வெளியிட்டது.
அமெரிக்காவின் நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மைய அதிகாரிகள் திங்களன்று கொரோனா வைரஸ் காற்றில் உள்ள துகள்கள் வழியாக பரவக்கூடும் என்பதை ஒப்பு கொண்டுள்ளனர். இது வைரஸ் பரவுதலின் முக்கிய வடிவமாக கூறப்பட்ட நிலையில் தற்போது நீண்ட கால தாமதமாக அமெரிக்காவின் நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையங்கள் இதை ஒப்புக்கொள்கிறது.
அமெரிக்காவின் நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையங்கள்( சிடிசி) இணையதளத்தில் வெளியிடப்பட்டு உள்ள வழிகாட்டுதல்களில் அதில் கூறபட்டு உள்ளது.
கொரோனா வைரஸ் எப்படி பரவுகிறது என்ற புதிய பிரிவு சேர்க்கப்பட்டுள்ளது, அதில் கொரோனா சில நேரங்களில் காற்றின் மூலம் பரவக்கூடும்" என்று கூறப்பட்டு உள்ளது.
காற்றில் உள்ள சிறிய துகள்களில் நிமிடங்கள் முதல் மணிநேரம் வரை வைரஸ்கள் இருப்பதால் நோய்த்தொற்றுகள் ஏற்படலாம் என்று அதில் கூறப்பட்டு உள்ளது."இந்த வைரஸ்கள் பாதிக்கப்பட்ட நபரிடமிருந்து 6 அடிக்கு மேல் உள்ள நபர்களை பாதிக்கக்கூடும்
இதேபோன்ற வழிகாட்டுதல் இதற்கு முன்னர்போடப்பட்டு பின்னர் திடீரென வலைத்தளத்திலிருந்து அகற்றப்பட்டது, அரசியல் தலையீடு குறித்த கவலைகளை எழுப்பிய இரண்டு வாரங்களுக்குள் கூடுதலாக மீண்டும் தற்போது இது போடப்பட்டு உள்ளது. இந்த சம்பவத்திற்கு பதிலளிக்கும் விதமாக, சிடிசி இணையதளத்தின் முன்னர் வெளியிடப்பட்டது தவ்றுதலாக இருந்தது தற்போது புதுப்பிக்கப்பட்டதுஎன கூறப்பட்டு உள்ளது.
Comments
Post a Comment