கொரோனா இருந்தா இருமல், காய்ச்சலுக்கு முன்னாடி இந்த அறிகுறிலாம் இருக்குமாம்... உஷாராகிகோங்க
கொரோனா இருந்தா இருமல், காய்ச்சலுக்கு முன்னாடி இந்த அறிகுறிலாம் இருக்குமாம்... உஷாராகிகோங்க...
கடந்த 10 மாதங்களாக கொரோனா தொற்றுநோயால் உலகமே போராடி வருகிறது. நாளுக்கு நாள் கொரோனா வைரஸ் பல உயிர்களைப் பறிப்பதோடு, உலகெங்கிலும் ஆபத்தான விகிதத்தில் பரவி வருகிறது. ஆரம்பத்தில் இது ஒரு நிமோனியா போன்ற சுவாச நோய்க்கான அறிகுறிகளை வெளிக்காட்டியது என்பதால், இது ஒரு சுவாச நோயாக கருதப்பட்டது. ஆனால் போக போக தான் இது உடலின் அனைத்து பகுதிகளையும் பாதிக்கும் என்பது தெரிய வந்தது. அதோடு பலவீனமான நோயெதிர்ப்பு சக்தியைக் கொண்ட வயதானவர்கள், குழந்தைகள் மற்றும் ஆரோக்கிய பிரச்சனைகளைக் கொண்டவர்களைத் தான் அதிகம் தாக்கும் என்று நாம் நினைத்துக் கொண்டிருப்பதையும் மீறி, பல வினோதமான வழிகளில் இந்த வைரஸ் வெளிபடுகிறது. பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும் நரம்பு மண்டலத்தை தாக்கலாம் பொதுவான ஒரு கொரோனா வைரஸ் தொற்று ஆரம்பத்தில் தொண்டை கரகரப்பு, காய்ச்சல், விவரிக்கப்படாத சோர்வுடன் தொடங்கலாம். ஆனால் அனைவருக்குமே இம்மாதிரி இருக்காது. தொற்று ஏற்பட்ட ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு மாதிரியான அறிகுறிகள் வெளிப்படும்.
அதில் வைரஸால் பாதிக்கப்பட்ட நோயாளிகள் கொரோனா சோதனைக்கு முன் வெளிப்பட்ட தனித்துவமான அறிகுறிகளாக கடுமையான தலைவலி மற்றும் சுவை மற்றும் வாசனை இழப்பு போன்றவற்றை தெரிவிக்கின்றனர். இந்த அறிகுறிகள் கோவிட்-19 ஒரு சுவாச நோய் என்பதில் இருந்து வெகு தொலைவில் உள்ளது என்பதை சுட்டிக் காட்டுகிறது. சில நோயாளிகளுக்கு இந்த வைரஸ் முழு நரம்பு மண்டலத்தையும் தாக்குகிறது.
கோவிட்-19 இன் 4 நரம்பியல் அறிகுறிகள் அன்னல்ஸ் ஆஃப் நியூரோலஜியில் வெளியிடப்பட்ட ஒரு சமீபத்திய ஆய்வின்படி, பெரும்பாலான கொரோனா நோயாளிகள் கொரோனாவின் முக்கிய அறிகுறிகளான வறட்டு இருமல், தொண்டை கரகரப்பு அல்லது காய்ச்சலுக்கு முன் நரம்பியல் அறிகுறிகளான தலைவலி, தலைச்சுற்றல், பக்கவாதம் மற்றும் விழிப்புணர்வு குறைதல் போன்றவற்றை சந்திப்பதாக தெரிவிக்கின்றனர். இந்த ஆய்வின் ஆராய்ச்சியாளர்களின் கூற்றுப்படி, மற்ற நோயாளிகள் வாசனை மற்றும் சுவை இழப்பு, கவனச்சிதறல் மற்றும் வலிப்புத்தாக்கங்கள் உள்ளிட்ட பிற நரம்பியல் அறிகுறிகளையும் குறிப்பிட்டுள்ளனர். SARS-CoV-2 தொற்று ஆரம்பத்தில் நரம்பியல் அறிகுறிகளைக் காட்டலாம் இதுக்குறித்து ஆய்வு நடத்துவதற்கு, கொரோனாவின் பொதுவான அறிகுறிகள் தோன்றுவதற்கு முன் நரம்பியல் அறிகுறிகள் வெளிப்படுவதைப் புரிந்து கொள்ள ஆய்வாளர்கள் வடமேற்கு மருத்துவத்தில் உள்ள 19 நோயாளிகளை ஆய்வு செய்தனர். வடமேற்கு பல்கலைக்கழக ஃபீன்பெர்க் ஸ்கூல் ஆஃப் மெடிசின் நரம்பியல் பேராசிரியரான இகோர் கோரால்னிக், "பொதுமக்களும், மருத்துவர்களும் இதுக்குறித்து தெரிந்து வைத்திருப்பது முக்கியம்.
ஏனெனில் SARS-CoV-2 தொற்றினால் காய்ச்சல், இருமல் அல்லது பிற சுவாச பிரச்சனைகள் ஏற்படுவதற்கு முன் நரம்பியல் பிரச்சனைகளுடன் தோன்றலாம்" என்று கூறினார். இந்தியாவில் கொரோனா வைரஸ் வழக்குகள் கடந்த சில வாரங்களால் இந்தியாவில் கொரோனா வைரஸ் வழக்குகுளில் தொடர்ச்சியான சரிவு காணப்பட்டாலும், கேரளா, சத்தீஸ்கர் மற்றும் உத்ரகாண்ட் உள்ளிட்ட சில மாநிலங்களில் ஒரு உயர்வு காணப்படுகிறது. அதோடு இறப்பு எண்ணிக்கை 103,600-ஐ எட்டியுள்ளதால், உலகெங்கிலும் உள்ள மருத்துவ வல்லுநர்களும் ஆராய்ச்சியாளர்களும் புள்ளிவிவரங்களை நேர்மறையான வெளிச்சத்தில் காட்ட 'அறிவியல் சான்றுகளிலிருந்து விலகிச் செல்ல வேண்டும்' என்று நாட்டை எச்சரிக்கின்றனர்.
Comments
Post a Comment